பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 73

என்ற சொற்கள் அன்புடைய நெஞ்சத்தினின்று வெளி வந்தவையாகும்.

அடுத்து வீடணனைத் தன் பக்கல் சேர்த்துக் கொள்ளும்போது இராமன் கூறிய, ஆழியான் அவனை நோக்கி

அருள்சுரந்து உலகைக் கூர்ந்தே ஏழினோடு ஏழாம் நின்ற

உலகும்என் பெயரும் எந்நாள் வாழும்நாள் அன்று காறும்

வாளெயிற்று அரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம்

நின்னதே தந்தேன் என்றான்"

என்ற உரையும் அன்பினில் விளைந்த ஆரமுதமாகும்.

2. கற்பு: இதிகாச சிரேஷ்டமான ரீஇராமாயணத் தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது என்பது பரீவசனபூஷணம்" பிராட்டி என்னாது சிறையிருந்தவள் என்று அருளிச் செய்தது பிராட்டியினுடைய பேரருளின் மிகுதியைத் தெளிவுபடுத்துவதற்காக தேவதேவனுடைய பட்டத்துத் தேவியான தன்னுடைய பெருமையும், சிறையிருத்தலின் தண்மையும் (தாழ்ச்சியும் பாராமல், தேவமாதர்களுடைய சிறையை விடுவித்தற்காகத் தான் சிறையிருந்தது பேரருளின் வசப்பட்டவள் என்பது தெளிவாகின்றது. குழவி கிணத்திலே விழுந்தால் ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப்போலவே, இவ்வுயிர்கள் விழுந்த பிறவிப் பெருங்கடலிலே தானும் ஒக்கவந்து பிறந்து இவர்கள் பட்டதைத் தானும் பட்டுக் காப்பாற்றுகையாலே, ஒரு காரணம்பற்றி வாராத தாயாகின்ற சம்பந்தத்தால் வந்த

16. யுத்த. வீடணன் அடைக். 142 17. ரீவசன - பூஷ - சூத்திரம் - 5