பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

அளவில்லாத அன்பாகிய குணத்திற்கும் இஃது ஒரு விளக்கமாகும். இந்த மேம்பட்ட குணத்தை வெளியிடு வதற்காக அன்றோ பரமாசாரியாரான நம்மாழ்வர் தனிச்சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் (திருவாய் 4.85 என்று அருளிச் செய்தது; இத்திருவாய்மொழிதான் சிறையிருந்தவள்’ என்று அருளிச் செய்ததற்கு மூலம் என்று கருதலாம்.

தலைவியின் பெருமையையும் உரிமையையும் குறித்துப் பேசும் தொல்காப்பியர் ஓர் இடத்தில்,

'கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்துறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும்" என்பவற்றைத் தலைவியின் குணங்களாகக் குறிப்பிடுவர். கற்பு என்பது, கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம். 'கற்பெனப் படுவது சொல்திறம்பாமை' என்று இதனை விளக்குவர் ஒளவைப் பாட்டி காமம் என்பது அன்பு.விருந்து புறந்தருதல் என்பது, வறுமையையோ செல்வத்தையோ கருதாது இயன்றவரை விருந்தினரைப் பாதுகாத்து அவர்களை மனம் மகிழ்வித்தல். இவற்றுள் கற்பு, காமம், விருந்தோம்பல் என்ற மூன்றையும் நாம் மக்கட் பண்புகலாகக் கொள்வோம். காமம் (அன்புடைமையை) மேலே விளக்கினோம். விருந்தோம்பலைக் கற்பை அடுத்து விளக்குவோம். கற்பை ஈண்டு விளக்குவோம்.

கண்ணகியை கற்புக்கு இலக்கணமாகக் கொள்வர் தமிழ் இலக்கியவாதிகள். கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம்

18. தொல். பொருள். கற்பியல் - 11 19. கொன்றை வேந்தன் - 14