பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்று காட்டுவான் கவிஞன் எல்லா இடங்களிலும் ஏனையோர் உட்பட அந்தணர்கள், விருந்தினர் உறவினர் இவர்களோடு தம்தம் வீட்டில் உணவு கொள்கின்றனர். எப்படிப் பட்ட விருந்து? சிறந்த மாங்கனிகள் என்ன, பலாக்கனிகள் என்ன, வாழைப் பழங்கள் என்ன இவற்றோடு பலவகைப் பகுப்புகளினாலும் அப்பருப்பு களை முழுத்துகின்ற நெய்யினாலும், செந்நிறமுள்ள தயிர் கட்டிகளினாலும் கண்டசருக்கரையினாலும் இவற் றிடையே நெருங்கிய சோற்றினாலும் ஆன உணவை உண்கின்றனர். எப்படி உண்கின்றனர்? ஆரவாரத்துடன் உண்கின்றனர். ஆரவாரமின்றி அமைதியாக விருந்து அயர்தலைச் செட்டி நாட்டில்தான் காணலாம். பதினாறு ஆண்டுகள் காரைக்குடியில் நகரத்தார் நடுவே வாழ்ந்த எனக்கு இதனை நேரில் கண்ட அநுபவம் உண்டு. அமலை இல்லாமைக்குக் காரணம், விசாரிக்கப் பொறுப் புள்ளவர்கள் இருப்பதனால் உண்பவர்கள் பேச்செடுப் பதற்கு வாய்ப்பே இல்லை. பிற இடங்களில் விசாரிப்போரும் உரக்கப் பேசுவார்; உண்பவர்களும் அது கொணர்க, இது கொணர்க என்று கூச்சலிடுவார்கள். இவை பல இடங்களில் நாம் காணும் காட்சிகள். விருந்து அயர்தல் மக்கள் பண்பாட்டில் தலைசிறந்தது.

பலகாலும் பழகி அறிந்தவர்கட்குச் சிறந்த உணவு அளித்தலும், தம்மைவிட மிக்கச் செல்வமுடையவர்கட்குப் புகழ்கருதி போற்றிச் செய்யப்படும் ஆடம்பரச் சிறப்பும், ஏதேனும் ஒரு நற்பலனை எதிர் நோக்கி சிறந்த உணவு நல்குதலும் விருந்து என்று இக்காலத்தில் போற்றப் பெறுகின்றன. திருவள்ளுவர் இவற்றை விருந்து என்று கொள்ளவில்லை. முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள் தரும் விருந்துகள் யாவும் திருவள்ளுவர் கருத்திற்குப் பொருந்தா.