பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

முன்னுரை

கம்பன் வைணவனா? என்று ஆராய்வார் சிலர். திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்க்கு அமுதம் ஈந்தவன் திருமால். அந்தத் திருமாலிடம் இணையற்ற பக்தி கொண்ட கம்ப நாடன் அவன் அவதாரமாகிய இராமனின் திருக்கதையை விருத்தம் எனும் ஒண்பாவால் அமைத்து மானிடர்களாகிய நமக்குத் தமிழ் அமிழ்தம் ஈந்து மிகு புகழ் பெற்ற வரலாறே போதும் அவன் வைணவன் என்பதற்கு என்ற சான்றை முன்வைத்து தம் கொள்கையை நிறுவுவர். அன்றியும் இவர்கள் விராதன், இந்திரன், கவந்தன் முதலியோரின் வாக்காக வரும் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்ககளின் தாக்கத்தை எடுத்துக்காட்டி அவற்றைத் தம் கொள்கைக்கு அரணாக அமைத்துக் கொள்வர், எடுத்துக் காட்டுகளாக சிலவற்றைக் காட்டுவேன்.

மூன்று கவடாய்

முளைத்தெழுந்த மூலமோ 1چ என்ற கவந்தன் வாக்கிற்கு,

மூவராய மூர்த்தி யைமுதல்

மூவர்க் கும்முதல் வன்றன்னை’

என்ற திருவாய்மொழி அடியும், 1. ஆரணிய கவந்தம் - 42 2. திருவாய். 3.6:2