பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 83

மருந்தும் உண்டுகொல் யான் இ ன -

நோய்க்குஎன்று மயங்கும்’ என்பது பிராட்டியின் கவலை. உண்ணும்போது பரிமாறுவதற்கு மனைவி இல்லாமையால் மெல்அடகு ஆர் இட அருந்தும் என்று கவல்கின்றாள் பிராட்டி. மனைவியோடு இல்லறத்தில் வாழ்பவனே துறந்தார்க்கும் துவவாதவர்க்கும்.இல்வாழ்வான் என்பான் துணை' (42) என்ற வாக்குப்படி விருந்தினராக வரும் துறந்தார் முதலியோரை உபசரிக்கத்தக்கவனாதலால், மனைவியைப் பிரிந்த நிலையிலுள்ள இராமபிரானுக்கு விருந்தினரை உபசரித்தல் இயலாமை பற்றி விருந்து கண்டபோது என்னுறுமோ? என்று கவலைப்படுகின்றாள். இராமன் கானகத்தில் துறவிக் கோலத்தோடு இருப்பதால் பெரும்பாலும் துறவியரே விருந்தினராக அமைவார்கள் என்பதால் உணவுக்கு அடகு என்ற பெயர் வந்தது. அடகு - இலை உணவு. இது காய்கனி கிழங்கு முதலிய மற்றை உணவுக்கும் உபலட்சணம். இவை வனத்தில் வதியும் முனிவர்க்கு உரிய உணவு. இவற்றால் பிராட்டியின் ‘விருந்தோம்பல் உணர்வு பிரிவுக் காலத்திலும் தலை எடுக்கின்றது.

பரத்துவாசமுனிவர்: முனிவர்களில் துணைவியாருடன் உள்ளவர்களும் உளர். எ.டு. சாபங்க முனிவர்" தனிமையாக மாணியாக உள்ள வரும் உள்ளனர். எ-டு. பரத்துவாசர்" அகத்தியர்” ஆகியோர்.

குகனிடம் விடை பெற்றுக் கொண்டு இராம லட்சுமணர்கள் சீதாப் பிராட்டியுடன் ஒரு வனத்தின்

35. மேற்படி - 15 36. ஆரணிய. - சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் - 16 37. அயோத்தி. - வனம் புகு படலம் - 23-35 38. ஆரணிய. - அகத்தியப் படலம்.