பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வழியாகச் செல்லுகின்றனர். அப்போது அங்கு பரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொள்ள அங்கு வருகின்றார். வந்தவர் இராமனின் தாபதகோலத்தைக் கண்டு வருந்து கின்றார். வந்த காரணத்தை இராமன் தெரிவிக்க முனிவரும் நிலைமைக்கு விதியே காரணம் என்று நொந்து கொள்கின்றார். பிறகு முனிவர் மூவரையும் தாம் வாழிடத்திற்கு அழைத்துச் சென்று உண்டி உறையுள் தந்து உபசரிக்கின்றார்.

புக்குறை விடம்நல்கி பூசனை முறைபேணி தக்கன கனிகாயும் தந்துரை தரும்.அன்பால் தொக்கநன் முறைகூறித் தூயவன் உயிர்போலும் மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வுற்றார்".

இராமன் முதலியோர்க்குப் பரததுவாச முனிவர் அதிதிகட்குச் செய்யவேண்டிய முறைப்படியே உபசாரங்கள் புரிந்து, தந்தை மக்களிடத்து அன்பு கொண்டு நடப்பதைக் கண்டு இராமன் முதலியோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சவரி. சவரி மதங்க ஆசிரமத்தில் மதங்கரது சீடர்கட்கு உபுசாரம் செய்து கொண்டு அவ்வாசிர மத்திலேயே வாழ்ந்து வந்த துறவறம் பூண்ட தவப்பெண். இராமலக்குமணர்கள் மதங்காசிரமத்திற்கு எழுந்தருளும் செய்தியை முன்னதாகவே அறிந்து எதிர் நோக்கி அவ்வனத்திலுள்ள நல்ல கனிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவர்கள் அவ்வாசிரமத்திற்கு எழுந்தருளிய வுடன் அக்கனிகளை அவர்கட்குத் தந்து உபசரித்து இராமபிரானது அருளால் தன் பிறப்பை யொழித்தவள்.

இராமலட்சுமணர்கட்கு இப் பெருமாட்டி விருந்து செய்து உபசரித்ததை,

39. அயோத்தி - வனம்புகு - 28