பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

பின்னர் சவரி சுக்கிரீவன் உள்ள இடத்திற்குச் செல்லும் வழியைக் கூறி முக்தி அடைகின்றாள்.

சுக்கிரீவன்: இராமபிரானிடம் "சரண்உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம்" என்று கூறி சுக்கிரீவன் சரண் புகுந்த பின், அதுமனின் வேண்டு கோளின்படி இராமன் சுக்கிரீவன் இல்லத்திற்கு எழுந்தருளு கின்றான். இராமனும் சுக்கிரீவனும் தூய்மையான மலர் ஆசனத்திலிருந்து அன்புடன் அளவளாவுகினர். நீராடிய பின் இராமன் விருந்துண்கின்றான்.

கனியும் கந்தமும் காயும் தூயன இனிய யாவையும் கொணர யாரினும் புனிதன் மஞ்சனத் தொழில்பு ரிந்துயின் இனிதி ருந்துநல் விருந்தும் ஆயின்ான்"

என்ற பாடலால் இதனைக் கவிஞன் காட்டுவான். இலக்குவனைப் பற்றிய செய்தியே இங்கில்லை. அவன் விருந்தில் கலந்து கொள்ளவில்லையா? ஒன்றுந் தெரியவில்லை. "மகனே இவன் பின்செல், தம்பி, என்னும்படியன்று அடியாரினில் ஏவல் செய்தி" என்று அன்னையின் அறவுரைப்படி பின்புலத்தில் ஏவல் செய்து கொண்டிருந்தானா? கம்பன் எதையும் காட்டவில்லை.

'பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைச்"

சுக்கிரீவன் பிரிந்திருக்கும் நிலையை அநுமன் இராமனுக்கு நேரில் காட்டவே இந்த ஏற்பாடு செய்தனனோ? என்று கருத இடந்தருகின்றது. இக்காலத்தில் தலைவர்கள் தரும் விருந்தில் தானே அரசியல் பேச்சு நடைபெறுகின்றது? அது

42. கிட்கிந்தை - நட்புக்கோள் - 34 43. அயோத்தி - நகர் நீங்கு - 152 44. கிட்கிந்தை - நட்புக்கோள் - 35