பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 87

போன்றது ஒன்றுதான் இதுவும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

சாப்பாட்டு இராமன். இவ்விடத்தில் விருந்தோம்பல் தொடர்பான ஒரு கருத்து நினைவிற்கு வருகின்றது. இந்த உலகில் எத்தொழிலும் செய்யாது உண்டு ஊர் சுற்றுபவனைச் சாப்பாட்டு இராமன் என்று சாட்டுப் பெயரால் மக்கள் வழங்குவதைக் காணலாம். "நடையில் நின்றுயர் நாயகனின் திருநாமத்தை இப்படிப் பயன்படுத்தலாமா? என்பது வினா. இராமனிடம் மக்கள் கண்ட ஒரு குறைதான் இப்படிப் பேசச் செய்து விட்டது என்பது அடியேனின் ஊகம்.

தேவர்கள் கருத்துப்படி அரசை மேற்கொள்ளுமாறு இராமன் பரதனை வேண்ட, அவனும் ஒரு சபதத்துடன் ஒருப்படுகின்றான்.

'ஆமெனில் ஏழிரண் டாண்டில் ஐய நீ நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம் கோமுறை புரிகிலை என்னில் கூர்எரி சாம்.இது சரதநின் ஆணை சாற்றினேன்".

இதில், "அண்ணா, நீ பதினான்கு ஆண்டு கழிந்ததும் ஒரு நாள் கூடத் தாமதிக்கலாகாது; அங்ஙனம் வாராமல் ஒருநாள் தாமதித்தாலும், எரி தழலில் மூழ்கி என் உயிரை மாய்ப்பேன். உன் மேல் ஆணை” என்று சூளுரைக்கின்றான். இராமகாதையைக் கற்போர் அனைவரும் இதனை நன்கு அறிவர்.

இராமன் இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்தானா? இல்லை என்பதே மக்கள் தீர்ப்பு. இராமன் முதலியோர் புட்பகவிமானத்தில் வந்துகொண்டுள்ளனர். இதனை

45. அயோத்தி - திருவடி - 133