பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

அறிந்த பரத்துவாசர் இருடிகள் சூழ இராமனை எதிர் கொள்ளச் செல்லுகின்றார். இதனைக் கண்ணுற்ற இராமன் புட்பக விமானத்தை இறங்கச் செய்கின்றான். இராமன் விரைவாக முனிவர் எதிரில் சென்று வணங்க இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு மகிழ்கின்றனர்.

பரத்துவாசர் இன்று எம் விருந்தாளியாக இருக்க என்று இராமனை வேண்ட அவனும் அவ்வாறே ஒருப்படுகின்றான். 'பரதன் உயிர் பெரிதா? முனிவர் அளிக்கும் விருந்து பெரிதா?" என்பதை ஒராது விருந்திற்கு இணங்கியது பெருங்குற்றம் கணையாழியுடன் அதுமனைச் செய்தி கூறி அனுப்பினது சரியானாலும் விருந்திற்குத் தங்கினது சரியன்று. இதனால்தான் இராமன் "சாப்பாட்டு இராமனாகின்றான்" என்பது மக்கள் தீர்ப்பு.

4. செய்ந்நன்றியறிதல்: ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிடில், உலக வாழ்க்கை நடைபெறாது இவ்வாறு உதவுதல் ஒர் அறச் செயல்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்ற குறட்பாவில் இறுதிபகுதி செய்ந்நன்றியறிதலாகிய கடமையை வலியுறுத்துகின்றது. செய்ந்நன்றியறிதல் என்ற இந்த அறச் செயலுக்கு மாபாரதத்தில் கன்னனையும் இராமாயணத்தில் கும்பகருணனையும் எடுத்துக் காட்டுகளாக நம் முன்னோர் கொள்ளும் மரபும் உண்டு.

இக்குறளை மனத்திற் கொண்டு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர், கிழார் பாடிய பாட்டொன்று உண்டு - புறநானூற்றில் وأتيكيب

ஆன்முலை அறுத்த அறணி லோர்க்கும் மானிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்