பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் , 89

குரவர் தப்பிய" கொடுமை யோர்க்கும் வழுவாய மருங்கிற் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே (புறம் 34) என்ற புறநானூற்றுப் பாடற் பகுதியால் தெளியப்படும்.

மழைக்காலம் கழிந்த அளவிலும் சுக்கிரீவன் முன்பு சொன்னபடி சேனையுடன் வந்திலன். இராமபிரான் சினங் கொண்டு கிட்கிந்தைக்குச் செய்தி அறிந்து வரும்படி இலக்குவனை அனுப்புகின்றான். தாரையிடம் பேசியபிறகு இலக்குவன் அதுமனை நோக்கி, "அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனையாகும் அன்றோ?'. என்று கூற, அதற்கு மறுமொழியாக, அநுமன்,

சிதைவகல் காதல் தாயைத்

தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தணரை ஆவைப்

tiss6.Jóðslj Liss60)6]t iss65); வதைபுரி குநர்க்கும் உண்டாம்

மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் றார்க்கொன் றேனும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?" என்று பேசுவான். தாய்க் கொலை, தந்தைக் கொலை,

ஆசான் கொலை, அந்தணன் கொலை, பசுக்கொலை, குழவிக் கொலை, பெண் கொலை என்னும் கொடும்

46. குரவர் தப்பிய என்பது பழைய பாடம், ஒளவை துரைசாமி காட்டியது. உ.வே.சா. பதிப்பில் பார்ப்பார் தப்பிய என்றே உள்ளது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளதென்பது அவர்தம் திருக்குறள் உரையால் அறியப்படும். 47. கிட்கிந்தை - கிட்கிந்தை - 61

48. மேற்படி - 62