பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஓயாத உழைப்பின் காரணமாகவும் மிகவும் இளைத்தும் களைத்தும் காணப்பட்டான். அந்த வீட்டில் ராமன் தோட்டக்காரன் மட்டுமல்ல, வேலைக்காரன், எடுபிடி. சமயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் கூட இருப்பான். ஏதோ ஒரு வேலைக்காக, எசமானி யசோதையும், எசமானர் வாசுதேவனும், அடிக்கடி ராமனைக் கூப்பிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ராமன் இல்லையென்றால், தம்பதியர் இருவருக்கும் எந்த வேலையும் ஓடாது. - நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் யசோதையும் வாசுதேவனும், வாசுதேவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கிறார். ஆயிரக் கணக்கில் சம்பளம். சொந்தமா பெரிய வீடு. கார், மோட்டார் சைக் கிள் போன்ற வாகன வசதிகளும் உண்டு. - கணவன் மனைவி இருவரும் அதிக ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரைத் தவிர அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை. ராமனும் சாதாரண வேலைக்