பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 13 மிரள விழித்தான். பக்கத்தில் நின்றவர்களும் கடைக்காரனும் ராமனைப் பார்த்துப் பரிகாசமாக சிரித்தார்கள். ராமனும் பதிலுக்கு அசட்டுச் சிரிப்பைச் சிரித்து விட்டு, பணத்தைக் கட்டி, மருந்தை எடுத்துக் கொண்டு, முயல் வேகத்தில் நினைத்து, ஆமை வேகத்தில் நடந்து வீட்டை அடைந்தான். - 'இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாயே ராமா! ரொம்ப சமர்த்து தான் என்று தன் எசமானி பாராட்டுவாள் என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்த ராமனுக்கு, ஓர் அதிர்ச்சி அங்கே காத்துக் கொண்டிருந்தது. 'ராமா இங்கே வா! யசோதையின் குரலில் கோபம் இருந்தது. - - இதோ வந்துட்டேம்மா! என்று மருந்தையும், மருந்துச் சீட்டையும், மீதி சில்லறைக் காசுகளையும் மேசை மீது வைத்தான் ராமன். - 'வீட்டிற்குள் வந்த பிறகு, எவ்வளவு நேரம் இப்ப்டியே நின்று கொண்டிருப்பாய் உடனே குரல் கொடுக்கக் கூடாதா என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டாள். -