பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 'நீங்க வந்ததும் தரலாம்னுதான் நின்னுகிட்டே இருந்தேன்' என்று நிதானமாகப் பதில் சொன்னான் ராமன். - 'வீட்டில் இருக்குறது நீ, நான், ஐயா மூன்று பேருந்தானே! நம்ம மூணு பேருக்கும் தெரியாம எப்படி அது காணாம போகும்! - - காணாமற் போய்விட்டது என்ற வார்த்தைகளைக் கேட்டவுடனே, தீயை மிதித்தவன் போலத்துள்ளி நின்றான் ராமன். 'என்னம்மா சொல்றீங்க! நம்ம வீட்டில் திருட்டா?” - "ஆமா ஐயா குளிக்கப் போறதுக்கு முன்னர்லே, கல் பதித்த ஒரு மோதிரத்தைக் கழற்றி, மேசைமேல் வைப்பார்னு உனக்குத் தெரியுமா இல்லியா? ' நல்லா தெரியுமே! 'அந்த மோதிரத்தைத் தான் இப்ப காணோம்! இத்தனை நாள் இருந்தது இன்னைக்கு மட்டும் எப்படி காணாமல் போகும்? 'எனக் குத் தெரியாதும் மா! நான்