பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 15 கடைக்குப் போய்ட்டு இப்பத்தானே வர்ரேன்! சத்தியமா நான் எடுக்கலே! எனக்குத் தெரியாதும்மா!' - - - 'ஒன்னு ஐய எடுத்துருக்கனும்! இல்ல நான் எடுத்திருக்கனும். இல்லேன்னா...' யசோதை பேச்சை முடிப்பதற்குள், வாசுதேவன் பேசலானார். - 'யசோதை அப்படியெல்லாம் பேசக் கூடாது. நானே தான் மோதிரத்தை இங்கே வச்சேன். காணாமல் போச்சுன்னா தேடிக் கண்டு பிடிக் கணுமே தவிர, வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது.” . . . நாம பேசாம இருந்தா, இப்படித்தான் ஒன்னு ஒண்ணா காணாம போய் கிட்டே இருக்கும்! - * 'என்மேல. நீங்க சந்தேகப்படுறீங்களாம்மா? உடல் கூனிக்குறுக நின்று கேட்டான் ராமன். அவனது கண்கள் தரையைப் பார்த்துக் கொண்டேயிருந்தன. அவனது பாதங்களை நன்றாக உற்றுப் பார்த்தவன், அப்படியே தன் உடம்பை கொஞ்சமாக மேலே பார்த்துக் கொண்டே வந்தான். - -