பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - நரம்புகள் வீங்கிப் புடைத்துக் கோடு கோடாகத் தெரியும் பாதங்கள். நீரில்லாத ஏரியின் தரை வெயிலிலே வெடித்திருப்பது போன்று தோலின் அமைப்புகள். குச்சி போன்ற கால்களை மூடி மறைத்திருக்கும் தையல் போட்ட கால் சட்டை. தொய்க்காமல் அழுக்கேறிய கால் சட்டைக்கு மேலே ஒட்டிக் கிடந்த வயிறு. அதற்கு எட்டாமல் இருப்பது போல முட்டிக் கொண்டிருக்கும் கூடான மார்பு. அவனது கண்கள் கொட்டிய கண்ணிர், முட்டிய மார்பில் வீழ்ந்து, ஒட்டிக்கிடந்த வயிற்றுத் தொப்புளில் வீழ்ந்து மறைந்தது. பத்து வருஷமா நான் உங்ககிட்ட வேலை செய்யுறேன். இதுவரையில் எந்தவிதமான குற்றமும் நான் செய்யலே. ஐயா, மோதிரத்தை திருடுற அளவுக்கு, என் நிலைமையில் என்னம்மா மோசம் வந்துடுச்சு? \ 'உன் மனைவி படுத்த படுக்கையா கிடக்குறான்னுநீதானே சொன்னே என்னைப் போல ஏழைகளுக்கு நோய் வர் ரதும், பசி பட்டினியா சாகறதும், சர்வ சாதாரணம்மா! அதுக்காக, ஏழைங்க எல்லாம் திருடித் தான் பிழைப்பாங்கன்னு நீங்க தீர்மானம்