பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 17 பண்றது, கேட்க நல்லா இல்லேம்மா! அதிகமா ஒன்றும் பேச வேண்டாம். இப்பவே நான் போலீசுக் குப் போன் பண்ணுறேன்! தொலைபேசி இருக்குமிடத்தை நோக்கி வேகமாகப் போனாள் யசோதை! வாசுதேவனும் வேகமாகப் போனார். 'யசோதை! இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். பைத்தியம் புடிச்சுடிச்சா உனக்கு! மோதிரம் போனாலும் பரவாயில்லை! போலீசுக்கு போன் பண்ண உன்னை நான் அனுமதிக்க் மாட்டேன்.” காணாம போன மோதிரம், நான் உங்களுக்கு ஆசையா அன்பளிப்பா கொடுத்ததுங்க! இருக்கலாம். இருந்தாலும், இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். - • . காரணம்? போலிஸ்வந்தா, முதல்லே ராமனைத் தான் விசாரிப்பாங்க! பிறகு, ஸ்டேஷனுக்கு அழைச்சிகிட்டுப் போவாங்க. இப்ப சொல்ற மாதிரி தான், எனக்கு எதுவும் தெரியாதுன்னு ராமன் சொல் வான். உன்னைப் போலவே,