பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 27 தாய் மேல உள்ள பாசத்துக்காகத்தான் திருடியிருக்கான். - ஆமாங்க! "எனக்கு என் அம்மாதான் தெய்வம். அவள் சாகக் கிடக்குறப்போ, நான் எப்படிங்க பார்த்து கிட்டு இருக்க முடியும். என் தப்புக்குத் தண்டனை கொடுங்க சார். ஆனா, இந்த மருந்தை மட்டும் எங்க அம்மாவுக்குத் தயவு செய்து தந்து காப்பாத்திடுங்க சார்!’ கெஞ்சிக் கேட்டுக் கொண்டான் குகன். அன்னையிடம் அவன் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் கண்டு, வாசுதேவன் மனம் நெகிழ்ந்தது. யசோதையைப் பார்த்தார். பெண்மனம் அல்லவா! அவளும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். ஈன்றாள் பசி காண்பன் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக் கும் வினை * 'தன்னைப் பெற்ற தாய்க்கு பசியென்று கண்டாலும் அதனைப்போக்க, பெரியோர்கள் வெறுக்கின்ற செயலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கிற் பொருளைக் கொண்டு, தாயின், பசியைப் போக்கக் கூடாதுன்னு, வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே தெரியுமா தம்பி? 3 y 'ஏதோ அவசர புத்தியில செய்துட்டேங்க. -