பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப| lரும் அன்புக் கதைகள் 29 சத்தியம்.' போ! ஓடிப்போய் இந்த மருந்தை உன் கையாலே கொடு. அப்புறம் வா. ஆர அமர பேசிக்கலாம். - - - காலில் விழுந்துவிட்டு, மருந்தை எடுத்துக் கொண்டுமான் குட்டிபோல ஒடினான் குகன். எசமான். இப்ப போலீஸ் வருவாங்க. 'எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். தைரியமா போ! உண்மை பேசுற உன் மகன், நன்மை செய்யுறதுக்காக தெரியாம குற்றம் பண்ணி, குற்றம்னு தெரிஞ்ச பிறகு மன்னிப்பு கேட்டு, மனந்திருந்தின உன் பையன் பிற்காலத்துல பெரிய மனிதனா, புத்திசாலியா வருவான். நல்ல மகனை பெற்றெடுத்த உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது' என்று தைரியம் கூறி வாழ்த்தினார் வாசுதேவன். எசமான் ! 'நீங்கள் தெய்வம்ங்க!” கையெடுத்துக் கும் பிட்டு விட்டுக் கிளம்பினான். யசோதை ராமனிடம் பேசியதற்கு மன்னிப்புக் கேட்பதுபோல வாசுதேவனிடம் திரும்பினாள். வாசுதேவன் மெதுவாக சிரித்தார். யசோதையும் சிரித்தாள்.