பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவரால் செல்லையா 'எனக்குச் சேர வேண்டிய பாகத்தை சொத்துக்களைப் பிரித்துக் கொடு! எந்தவித சமாதானமும் எனக்குத் தேவையில்லை' என்றான் தம்பி சிவசாமி. - அண்ணனாயிற்றே என்ற மரியாதை கொஞ்சங் கூட அவன் பேசிய பேச்சில் தோன்றவில்லை. யாரோ ஒரு பயங்கர பகைவனிடம் பேசுவதுபோல அவன முகபாவனை இருந்தது. தம்புசாமிக்கோ மனக் குழப்பம். தடுமாற்றம். தவறு எப்படி நேர்ந்தது, என்ற ஒரு நினைவோட்டம். தம்பியின் மனம் மாறாதா, திருந்தாதா என்ற ஓர் ஏக்கம்! - சிவசாமியின் சினம் விளையாடும் முகத்தைப் பார்த்தான். ஆங்காரம் அதிகமாகிக் கொண்டிருந்ததே ஒழிய, அமைதி இனி அதில் வராது என்றும் தம் புசாமி தீர்மானமாகக் கருதினான். 'தம்பி! நாம் இரண்டு பேரும் பெற்றோர் இல்லாதவர்கள். நமது சின்ன வயதிலே பெற்றோரை இழந்தவர்கள் அநாதையாக இதே ஊரிலே தான் நாம் ஆதரவற்று அலைந்தோம். வீட்டுக்கு வீடு சென்றுகூலி வேலை செய்து