பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - - - , - 33 பிழைத்துக் கொண்டதுடன், உன்னையும் காப்பாற்றினேன். வயலில் வேலை செய்து வயிறு வளர்த்தேன். உன்னையும் வளர்த்தேன். அதற்குப் பிறகு உன் அண்ணி வந்தாள், அவளும் நானும் அரும்பாடுபட்டு, அடுத்தவரின் வயலை குத்தகைக்கு வாங்கி உழுது பயிரிட்டு, கொஞ்சங் கொஞ்சமாக நெல்லைச்சேர்த்து, பொருளைச் சேர்த்தோம். என்னைப் போல நீயும் வர வேண்டும். வளர வேண்டும் என்று விரும்பி, உன்னை வேலைக்கு அழைத்தேன். வேலை செய்ய உனக்கு மனமில்லை, படிக்கப் பள்ளிக்கு அனுப்பினேன். படிக்கவே உனக்கு விருப்பமிலலை. - இன்று வாலிபனாக வளர்ந்து விட்டாய். குடும்பப் பொறுப்பில்லை. சொன்னால் கோபப்பட்டாய். 'பழைய கதை வேண்டாம். படிக்கவும் இல்லை. பாடுபடவும் இல்லை. பந்த பாசம் உள்ள சொந்தம் என்று தினம் பேசும் உங்களிடம் கேட்கிறேன். பாகத்தைப் பிரிக்க வேண்டும்! முடியுமா முடியாதா?’ என்று கத்தினான் சிவசாமி.