பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு சரும் அன்புக் கதைகள் - 37 பழித்தும் இழித்துப் பேசவும் தலைப்பட்டனர். தனக்குக் கெட்ட பெயர் வந்ததைப் பற்றிக்கூட கவலைப் படாத தம்புசாமி, இனி தன் தம்பி திருந்தவே மாட்டான் என்று ஒரு முடிவுக்கு வந்தான். சம்மதித்தான். சகல பேர்களையும் அழைத்தான். நிலங்கள் இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டன. வீட்டுச் சொத்துக்களும், பண்ட பாத்திரங்களும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆளுக்கொரு வீடு என்று தனித்தனியே வாழவேண்டும் என்றும், இனி யாரும் யாருடனும் எந்தவித உறவும் கொண்டாடக் கூடாது என்றும், பேச்சு வார்த்தை கூட வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அந்த ஊரார் பேசி, உடன் பிறந்த சகோதரர்களைப் பிரித்து வைத்து விட்டனர். . மிகவும் ஏழையாக இருந்து கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவனல்லவா தம்புசாமி! அவன் தலையெடுத்து தங்களுக்கு மேல் வசதியாக வாழ்வதை, சோம்பேறியாக இருந்து சோற்றுக்குக் கஷ்டப்படும் மற்றவர்கள் பொறுப்பார்களா?... - *