பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தூண்டியதைக் கேட்ட முத்துலட்சுமி, அருகில் சிவசாமியிடம் வந்து... 'கொஞ்சம் அமைதியாயிரு தம்பி! அண்ணன் வந்ததும் பேசிக் கொண்டு மற்றவைகளைக் கவனிக்கலாம் என்றாள். அண்ணனாவது ஆட்டுக் குட்டியாவது! எனக்குச் சேரவேண்டிய காய்களை நான் பறித்துக் கொள்கிறேன். யாரையும் நான் கேட்க வேண்டியதில்லை. யாருக்கும் நான் பயப்படவுமில்லை. முடிந்தால் உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்! முரட்டுத்தனமாக சிவசாமி கத்தினான். உனக்கு உரிமையிருக்கிறது தம் பி; இல்லையென்று சொல்லவில்லை. - ‘'தேன் கூடு இருக்கிறது. தேனீக்கள் நாளைக்குள் போய் விடும். நாளைக்கு நானே பறித்துத் தருகிறேன். எடுத்துக் கொள்' என்றாள் அண்ணி. - இரவோடு இரவாக காய்களைப் பறித்துக் கொள்ள சதித்திட்டமா போடுகிறாய்! உன்னால் - தானே இவ்வளவு வம்பும் என்று அண்ணியை அடிக்க கையை ஓங்கிவிட்டு, வேலைக்