பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 45 காரர்களை ஏவினான். - முத்துலட்சுமி மரத்தின் அடிக்குச் சென்று. இன்று நான் மரத்தில் ஏற யாரையும் அனுமதிக்கமாட்டேன் என்று நின்றான். - கோபமடைந்த சிவசாமி, ஓடிவந்து தன் அண்ணியை ஓங்கி அறைந்து விட்டான். அடிபட்ட லட்சுமி கீழே விழப் போகும் பொழுது, வயலில் இருந்து வந்த தம்புசாமி தன் மனைவியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். சிவசாமிக்கு இன்னும் கோபம் தணியவில்லை. அண்ணன் தன்னைத் தாக்க வருவான் என்று நினைத்துக் கொண்டு தயாராக நின்றான். - "அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும். இவள் யார் வந்து குறுக்கே பேச? இனி யாராகிலும் வந்தால், கொலையே விழும்' என்று குதித்துக் குதித்துப் பேசினான். மற்றவர்கள் முன்னால் இப்படி மானபங்கப் படுத்தியது போல அடித்ததை நினைத்து. முத்துலட்சுமி குமுறிக் குமுறி அழுதாள். தம்பியின் தடித்தனத்தைப் பார்த்த கம்புசாமிக்க கோபம் காளவில்லை. அவன்