பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 'பண்பு தரும் அன்புக் கதைகள்’ என்னும் இந்த நூலில் அன்பும் பாசமும் நிறைந்த ஐந்து பேர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். . - தாய்மேல் பாசம் நிறைந்த மகனாக குகன். தம்பியின் பாசம் நிறைந்த அண்ணனாக தம்புசாமி, தமது மாணவன் மேல் பாசம் நிறைந்த தலைமை ஆசிரியர். தமது தோழன் மேல் பாசம் நிறைந்த தலைவனாக மூர்த்தி. நண்பனிடம் அன்பு காட்டிய குமார். அனைவரும் அன் பின் காரணமாக பண்பினைப் பெறுகின்றார்கள். அன்பும் பண்பும் வாழ்க்கையில் முகத்திற்கு இரு கண்கள் போல. உடலுக்கு இரு கரங்கள் போல. வாழ்க்கை - வண்டிக்கு இரு சக்கரங்கள் போல. 9.க.கு. - மாணவர்கள் இளம் பருவத்திலேயே சிறந்த பண்புகளைப் பெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் எழுந்த ஐந்து கதைகளும், குழந்தைகள் ஆண்டினைக் கொண்டாடும் 1979ம் ஆண்டில், நல்ல திருப்பத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் நூலாக மலர்ந்திருக்கின்றன. - எளிமையான தமிழில் , சரளமான நடையில் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் நூல் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் இந்ந்ாலை ஏற்று ஆதரித்து, பயன் தருமாறும் , பயன் பெறுமாறும் உங்கள் கரங்களில் படைக்கிறோம். லில்லி பவனம் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா. சென்னை -17