பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இத்தனை பாசம் என்று அழுதான். தன்மேல் தவறி விழுந்த மாங்காயின் மோதலைத் தாங்காத அற்ப அறிவுள்ள தேனி, என்னைத் தாக்கியது. நான் உங்களை வேண்டுமென்றே வெறித்தனமாகத் தாக்கிய பொழுதுங்கூட, என்னைக் கருணையுடன் காப்பதற்காக தேனிக்களிடமிருந்து கடிபட்டு என்னை காத்த நீங்கள்தான் இனி என்னைக் காக்க வேண்டும் என்று தன் முன்னால் நின்ற அண்ணியின் திருவடிகளைக் கட்டிப் பிடித்து, தன் கண்ணிரால் கழுவினான் சிவசாமி. மனிதர்களால் சமரசப்படுத்தி சாதிக்க முடியாத விரோதத்தை, தேனீக்கள் சாதித்துத் தந்ததற்காக இறைவன் வடிவிலே வந்த தேன் கூட்டை முத்துலட்சுமி வணங்கிக் கொண்டிருந்தாள். சகோதரர் இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் தழுவியவாறு எழுந்து மூவரின் முகத்திலும் பூரண திருப்தி நிறைந்த அன்பு, புன்னகை மூலமாக பரவி இருந்தது. அன்று முதல் சிவசாமி நல்ல தம்பி யாகிவிட்டான்.