பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 *. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா எல்லோரும் அப்படி அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். யாரும் எழுந்திருக்கக் கூடாது. எங்கேயும் போகக் கூடாது என்று கட்டளையிட்டார். என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல், மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டனர். - "நான் ஒவ்வொருவர் புத்தகப் பையையும் சோதனை போடப் போகிறேன். ஏன் தெரியுமா?' கொஞ்ச நேரம் நிறுத்தினார். மாணவர்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. உங்கள் வகுப்புக்கு ஆசிரியர் வரவில்லை என்பதால், அடுத்த வகுப்பில் போய் அமர்ந்து, பாடம் படிக்கச் சொன்னேன். ஆனால், அந்த வகுப்பில் உள்ள ஒரு பையனின் ஆங்கில இலக்கணப் புத்தகம் காணமல் போய் விட்டது. அந்த வகுப்பில் தேடினேன். - யாரிடமும் இல்லை. உங்கள் வகுப்பில் யாரோ ஒரு பையனிடம் தான் இருக்கிறது. நிச்சயம் இங்கேதான் இருக்கிறது. யாராவது தெரியாமல் எடுத்து வைத்திருந்தால், கொடுத்து விடுங்கள். தெரியாமல் செய்தால் அது சிறு தவறு தான்.