பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 53 அதை நான் மனப்பூர்வமாக மன்னித்து விடுவேன் என்றார் தலைமை ஆசிரியர். யாரும் ஒன்றும் பேசவில்லை. இடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை. யார் திருடியிருக்கலாம் என்ற எண்ணத்தில், ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டனர். வகுப்பறை ஒரே அமைதியாக இருந்தது. அந்த வகுப்பறை இதுபோல் என்றுமே அமைதியாக இருந்ததே இல்லை. ஒவ்வொருவர் முகத்தையும் தலைமை ஆசிரியர் பார்த்துக் கொண்டே வந்தார். அவரது பார்வையை அவர்களால் சந்திக்க முடியாமல், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, எதையோ தேடுவது போன்ற பாவனையில் உட்கார்ந்திருந்தார்கள். - இனிமேல் கேட்பதில் பிரயோசனமில்லை என்று காரியத்தில் இறங்கினார் தலைமை ஆசிரியர். ஒவ்வொருவர் பையையும் சோதனை போட்டார். புத்தகங்களை புரட்டிப் பார்த்தார் யாரிடமும் அந்தப் புத்தகம் இல்லை. - - அந்தப் புத்தகம் சிவப்பு அட்டை போட்டிருக்கும். ரென் அன் மார்ட்டின் என்பவர்களால் எழுதப்பட்டது.