பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள்' - - - 55 சாய்வு மேஜை (Desk) ஆகும். அதற்குள்ளே புத்தகங்கள் வைத்துக்கொள்ள அறை உண்டு. முத்து பயந்தபடி, தலைமை ஆசிரியர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தலைமை ஆசிரியருக்கு அவன்மேல் இப்பொழுது முழுமையாக சந்தேகம் வந்துவிட்டது. 'உன் சாய்வு மேஜையில் என்ன இருக்கிறது? என்று நான் பார்க்கிறேன் என்று தலைமை ஆசிரியர் கையை விட்டார். முத்துவுக்கு உயிரே போனது போல் ஆகிவிட்டது. தலைமை ஆசிரியருக்கோ, திருட்டைக் கண்டுபிடித்து விட்டது போல உணர்ந்தார். அங்கே ஒரு புத்தகம் கனமான அட்டையுடன் இருந்தது. எடுத்துப் பார்த்தால் சிவப்பு அட்டை. அவருக்கு ஒரே கோபம். திருட்டு வேலையா செய்கிறாய்! தடிப்பயலே என்று முத்துவை அருகிலே இழுத்து கன்னத்தில் பளார் என்று அறைந்தார். - இல்லை சார் என்று முத்து தடுமாறினான். 'நீ பதில் எதுவும் பேசவேண்டாம். உன்னைப் பள்ளியை விட்டே வெளியே