பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w 58 டாக்டர் எஸ். நவராஜ் செல்லைய ஒரு மாதிரியாக எல்லாப் பைகளையும் சோதனை போட்டு முடித்தார் தலைமை ஆசிரியர். ஆனால், புத்தகம் கிடைக்க வில்லை. தவறாக நினைத்து, முத்துவை அறைந்து விட்டோமே என்று மனவருத்தப்பட்டார். மாணவர்களே! நாம் பள்ளிக் கூடத்திற்கு நல்லவைகளைக் கற்கத் தான் வருகிறோம். இதை நாம் மறந்து விடவே கூடாது. புதிய விஷயங்களைப் படிக்க வரும் போது, நாம் பொறுப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு பையன் கவனம் இல்லாமல் புத்தகத்தைக் காணாமல் போட்டு விட்டதால், எத்தனை மாணவர்களை சந்தேகப்பட நேர்ந்தது. எத்தனை மாணவர்களை கஷ்டப்பட வைத்து விட்டோம் பார்த்தீர்களா! இனிமேல் நீங்கள் உங்கள் பொருள்கள் மேலே கவனமாக இருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், தமது மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அப்பொழுது மாணவர்கள் வணக்கம் ஐயா என்று ஒரே குரலில் கூறி எழுந்து நின்றார்கள். தலைமை ஆசிரியர் திரும் பிப் பார்த்தார். ஆங்கில ஆசிரியர் வாசலில் நின்று கொண்டிருந்தார். -