பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 61. தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாய்! இதை எடுத்துக் கொண்டு, தலைமை ஆசிரியரை போய்ப் பார் என்று ஆங்கில ஆசிரியர் புத்தகத்தைக் கொடுத்தார். - இதோ இந்தப் புத்தகத்தையும் வாங்கிக்கொண்டு போ என்று முத்து, சிவப்பு அட்டைப் புத்தகத்தைக் காட்டினான். எல்லா மாணவர்களும் இளிச்சவாயன் என்று கத்தினார்கள். சுந்தரம் அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான். என் ஞாபக மறதியால் உங்களுக் கெல்லாம் தொந்தரவு தந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கீள். இனிமேல் இப்படி இருக்கமாட்டேன்' என்று சுந்தரம் நாத்தழு தழுக்க கூறினான். சிரித்த மாணவர்கள் இப்பொழுது அமைதியாக இருந்தார்கள். தலைமை ஆசிரியர் அடிக்கப் போகிறார் என்ற பயத்துடன் சுந்தரம் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். இவன் நன்றாக அடிவாங்கப் போகிறான் என்று மாணவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியரோ ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்தது r.