பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆடுகின்றார்கள் என்று பிரித்துக் கூற முடியாத அளவுக்கு, சிறப்பாக ஆடும் ஆட்டக்காரர்கள். இளங்கோ அந்த மாவட்டம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆட்டக்காரர்களில் ஒருவனாக இருந்தான். அவன் மாவட்ட விளையாட்டு வீரன் என்பதால் பள்ளியில் அவனைப் பாராட்டிப் பேசினர்கள். பரிசும் கொடுத்தார்கள். இருந்தாலும் இளங்கோவுக்கு மனதில் நிம்மதி, இல்லை. - - அந்தப் பள்ளிக்கூட கால்பந்தாட்டக் குழுவிற்கு மூர்த்தியே குழுத்தலைவனாக நியமிக்கப்பட்டிருந்தான். - குழுத் தலைவன் பதவி தனக்குக் கிடைக்கவில்லையே என்பதுதான் இளங்கோவின் மனக்குறை. - - எப்படியாவது மூர்த்திக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்து, அவனிடமிருந்து குழுத் தலைவன் பதவியைத் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள்ளே திட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அதை யாரிடமும் சொல்லாமல், ரக்சியமாகவே வைத்திருந்தான். அதற்காக மறைமுகமாக ஒரு