பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 68 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முடியவில்லை. எதையும் எளிதாக நம்புகின்ற மூர்த்தியும் கடைசியில் சரி என்றான். இளங்கோவின் நல்ல மனதைப் பாராட்டினான். மாவட்டத்தில் சிறந்த ஆட்டக்காரனாக வந்து, நல்ல புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தினான். இளங்கோ புன்னகை செய்தான். அவனது திட்டம் அவனுக்குத் தானே தெரியும்! - மாலையில் கால்பந்தாட்டப் போட்டி தொடங்கியது. இரண்டு குழுக்களையும் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தார் உடற்கல்வி ஆசிரியர். அவரே நடுவராகவும் இருந்தார். விளையாட்டில் அதிக ஆர்வம் உடைய தலைமை ஆசிரியர் ஏதோ அவசரவேலையாய் வெளியே போய் விட்டார். ஆனால் விளையாட்டில் விருப்பமுள்ள மாணவர் கூட்டம், மைதானத்தைச் சுற்றி நிறைந்திருந்தது. + ஆசிரியரின் விசில் ஒலி கேட்டதும் இரண்டு குழுவினரும் பாயும் புலிகளைப்போல, பந்தை நோக்கிப் பாய்ந்தனர். பந்தை உதைத்தனர், மேலே பறக்கச் செய்தனர். வேடிக்கை பார்க்கும் மாணவர்களுக்கோ அதிக -- o