பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆடமுடியாமல் போய்விட்டது. எங்கள் மேல் தவறில்லை என்றான். - தலைமை ஆசிரியர் இளங்கோவைப் பார்த்தார். 'நம் மாவட்டத்தில் நீ ஒரு நல்ல விளையாட்டு வீரன் என்பதால் தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். நீயோ ஒழுங்கு கட்டுப்பாடு என்பது தெரியாமல் இருக்கிறாய். நம் பள்ளியின்கெளரவம் என்னாவது? எனக்கு மிகவும் வேதனையாகவும் அவமானமாகவும் இருக்கிறது" என்று கோபமாகக் கேட்டார். 'இளங்கோ ஒரடி முன்னே வந்து நின்று . . கொண்டு ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்ததால்தான் இப்படி நடந்து கொண்டேன் சார்' என்றான். --- என்ன உளறுகிறாய்? அதிகப் பிரசங்கித்தனமாய் ஆட்டத்தை விட்டு வெளியே வந்ததும் இல்லாமல், அதற்கும் சமாதானம் கூறப்போகிறாயா? என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டார். கொஞ்சங் கூட பொறுப்பில்லாதவர்கள் என்று முனகியபடி எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நாங்கள் ஆட்டக்காரர்கள் தான். எங்களுக்குத் தலைவன் ஒருவன் உண்டு.