பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மீது எல்லா மாணவர்களும் குற்றம் சாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்பொழுது இளங்கோவும், தன்னைப் பற்றித் தவறாகத் தலைமை ஆசிரியரிடம் கூறியதும் தடுமாறிப் போய் விட்டான். தலைமை ஆசிரியர் தன்னை நோக்கிக் கோபமாகப் பேசியதைக் கேட்டதும், மூர்த்தி தடுமாறிப் போனான். சார் ...நான் ஒன்றும் ...யாரிடமும் சொல்லவில்லை என்று குழம்பியபடி பேசினான். - - உன் பதில் எனக் குத் தேவையில்லை. நேற்று செய்தது குற்றம். இன்று நீ பொய் பேசி அதை மறைக்க வேண்டாம். நீ செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? 'நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை சார். என் பேச்சை நம்புங்கள்!' என்றான். 'இத்தனை பேர் சொல்வது பொய். நீ சொல்வது மட்டும் தான் உண்மை. அப்படித்தானே! இதோ பார் மூர்த்தி! இதுவரை நீ.பள்ளிக்கூட கால்பந்தாட்டக் குழுவிற்குத் தலைவனாக இருந்தது போதும். இன்றிலிருந்து உன்னை நீக்கியிருக்கிறேன். இந்த ஆண்டு