பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 75 முழுவதும் நீ எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளக் கூடாது. இதுதான் உனக்கு சரியான தண்டனை. நீ போகலாம் ' என்றார். மூர்த்தி தலைமை ஆசிரியருக்கு வணக்கம் செய்து விட்டு, தலைகுனிந்தபடியே வெளியே வந்தான். இளங்கோவின் முகத்தில் சந்தோஷம் கூத்தாடியது. தன் திட்டம் பலித்தது என்று தன் இரண்டு கைகளையும் அடிக்கடி குலுக்கிக் கொண்டான். - * 'இனிமேல் உங்கள் குழுவிற்கு யார் தலைவனாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!" "எங்களுக்கு இளங்கோதான் வேண்டும் என்று எல்லோரும் கத்தினார்கள். - "நான் இளங்கோவை குழுத்தலைவனாக ஆக்கியிருக்கிறேன். இதை உடற் கல்வி ஆசிரியரிடம் கூறுங்கள். நீங்கள் எல்லோரும் பண்புள்ளவர்களாக ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும் ' என்று கூறி, நீங்கள் போகலாம் என்றார். - இளங்கோ குழுத்தலைவன் என்றதும், அவனை சூழ்ந்து கொண்டு எல்லோரும் கைகுலுக்கினார்கள். அவனை அங்கும் இங்கும்