பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 77 டாக்டர் நான் நாளை மறுநாள் மாவட்டக் கால் பந்தாட்டப் போட்டிக்குப் போயாக வேண்டுமே என்று அலறினான் இளங்கோ! 'இந்தக் கட்டிலைவிட்டு நீ எழுந்திருக்கவே கூடாது. காலில் கட்டுப் போடப் போகிறோம்' என்று அவனை பேச வேண்டாமென்று தடுத்தார் டாக்டர். - காலில் கட்டுப் போட்டாயிற்று. காலை அசைக்கக் கூடாது என்று உத்திரவும் வந்தது. தனியே படுத்தவாறு, இளங்கோ அழுது கொண்டிருந்தான். மாவட்ட விளையாட்டு வீரன் நான், வகுப்பிற்கு விளையாடும் குழுவிற்குத் தலைவனாக ஆகவேண்டும். என்பதற்காக, எவ்வளவு பெரிய பொய் சொன்னேன். அந்த மூர்த்தியின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்! இப்பொழுது மாவட்டத்திற்காக விளையாட முடியாமற் போயிற்றே என்று நினைத்தான். கண்ணிர் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. செய்தி கேட்டு மூர்த்தி ஓடி வந்தான். அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, கவலைப்படாதே இளங்கோ! நாளைக்கே கால்