பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா குமாருக்கு சைக் கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. ஒரு தடவை ஒட்டிப் பார்க்க வேண்டுமென்று கோபுவைக் கேட்டான். எங்க அப்பா திட்டுவார்' என்று கோபு இல்லையென்று சொல்லி விட்டான். வீட்டிற்குள் ஓடினான் குமார். அம்மாவிடம் தனக்கும் ஒரு சைக் கிள் வேண்டுமென்று கேட்டான். - அவர்கள் பணக்காரர்கள். சைக்கிள் வாங்க முடியும். நம்மால் முடியாதே என்றாள் குமாரின் அம்மா. 'நான் அப்பாவையும் கேட்பேன்' என்றான் குமார். வெளியே வந்தான் வேகமாக கோபு வந்து குமாரை கூப்பிட்டான். இந்தா ஒட்டு என்று தன் புதிய சைக்கிளைத் தந்தான். குமாருக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. இதுவரை கெஞ்சிக் கேட்டேன் இல்லையென்றான். இப்பொழுது கொடுத்து விட்டானே'