பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்று குமாரிடம் கூறி, குமாரின் அம்மாவிடமும் மன்னிப்பு கேட்டான். குமாருக்கும் குமார்.அம்மாவுக்கும் ஒன்றுமே புரிய வில்லை. குமார் சைக்கிளை உடைத்ததற்கு, நாங்கள் அல்லவோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றான் குமாரின் அம்மா. என் பையன் கோபுதான் பொய் சொல்லி விட்டான். பொய்யா? எப்படி என்றான் குமார். கோபு சைக்கிளை ஒட்டும் போதே, பெடல் உடைந்து போய் விட்டிருக்கிறது. அவன் உடைத்துவிட்டான் என்றால், அவன் அப்பா அடிப்பார் என்று பயந்து கொண்டுதான், அந்தப் பழியை குமார் மீது போட்டு விட்டான். "அதுதானே பார்த்தேன். ஒரு தடவை கூட சைக்கிள் ஓட்டத் தராத கோபு, எப்படி சைக்கிளைத் தந்தான் என்றான் குமார். . நீ உடைத்தால், அவன் அப்பா உன்னைக் கோபிக்க மாட்டார் என்று தான் உன்னைச்