பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்பு. கதைகள் 87 சொல்லி விட்டான். - அதையும் நான் நம்பி உங்களிடம் சண்டை போட்டு விட்டேன் இதோ நீங்கள் தந்த ஐந்து ரூபாய்! எங்களைத் தவறாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாள். குமாரின் அம்மா சமாதானம் செய்து அனுப்பினாள். குமார்! “பொய் சொல்வது வேறு. அதுவும் பிறர் மேல் வேண்டுமென்றே பொய் சொல்லித் தண்டனை வாங்கித் தருவது பாவம்' என்றாள் குமாரின் அம்மா! 'கனவிலும் கூட நான் கோபு மாதிரி பொய் சொல்ல மாட்டேன்' என்றான் குமார். 'நீ நன்றாகப் படித்து, தேர்விலே முதல் மார்க் வாங்கு. நான் உனக்கு புதிய சைக்கிள் வாங்கித் தர ஏற்பாடு செய்கிறேன்' என்று அம்மா கூறியதும், புதிய சைக்கிள் வந்து விட்டது போலவே மகிழ்ந்து, புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான் குமார்.