பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 7 என்று கூறியவாறு, அவனது கையில் பணத்தையும் மருந்துச் சீட்டையும் தந்தாள். 'எந்த மாதிரி வேலையாயிருந்தாலும் செய்யத்தானே இருக்கிறேன். அதனால் தானே எனக்கு வேலைக்காரன்னு பேரு” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே திரும்பினான் ராமன். இந்தா பாரு ராமா! மசமசன்னு நடக்காதே... அங்கே இங்கேயும் வேடிக்கைப் பார்க்காதே! யார் கிட்டேயும் நின்னு அரட்டை அடிச்சிக்கிட்டிருக்காதே! போனமா வந்தமான்னு இருக்கனும், புரியுதா?’ என்று ஒரு பிரசங்கமே பண்ணினாள் யசோதை! - 'இதோ ஒரு நிமிடத்துல ஒடி வந்துடறேம் மா' என்று தன் நடையில் வேகத்தைக் காட்டினான் ராமன். ஒட்டமாக ஒடிப்போய் திரும்பி வரத்தக்க வயதுள்ள வாலிபனுமல்ல.தட்டுத் தடுமாறித் தள்ளாடி நடக்கும் வயோதிகனுமல்ல ராமன். சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதன். நடுத்தர வயதுடைய ஆளாக இருந்தாலும், வறுமையில் வதங்கியதன் காரணமாகவும்,