பக்கம்:பதினாறும் பெறுக.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7



7

காட்சி: 3

இடம்: கமலவேணி வீடு

காலம்: மாலை

(கமலவேணி குறள்நெறி இசைப்பாடல் பாடிட, தாழம்பூ ஆடுகிறாள்.)

பாடல்: "ஒழுக்கமுடைமை”

இராகம்: நாட்டைக்குறிஞ்சி

தாளம்: ஆதி

எடுப்பு

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்றும் இடும்பை தரும்.”தீயொழுக்கம்

-வழக்கம் (நன்)

தொடுப்பு

வென்றியுடன் ஒழுக்கம் காப்பவன் மேலோன் வேதியன் ஆயினும் கெடுப்பவன் தீயோன் (நன்)

படிப்பு

உலகத்தோடொட்ட ஒழுகல் கல்லார் பல கற்றும் அறிவலார் கருதிடுவாய்

முடிப்பு

நலமிகவே பெறுவார் நற்புகழால் உயர்வார் இலம் எனும் நிலையிலும் இழி செயல் புரியாதார் (நன்)

சந்தம்

ஒழுக்கத்தில் வருவது மேன்மை-புலன் விருப்பத்தில் நிகழ்வது தாழ்மை-நலன் ஒழுக்கமுடையகுடி உயர்வினையுறுமதில் இழுக்கமுடையதெனில் இழி பிறப்பாகும் பகுத்தறிவுக் கண்ணன் குறள் நெறிப்பனுவலில் வகுத்திடும் கருத்தினில் திளைத்திடு அனுதினம் (நன்)

(கிராமியப் பிரபு செல்வரங்கம் வருகிறார் கையில் குடையுடன்)

செல்வ: பேஷ் ! பேஷ் பிரமாதம் ! பிரமாதம் !

கமல: ஐயா !வாருங்கள். உட்காருங்கள். நீங்கள் யாருங்க ?

செல்வ! நான்தான் சேலம் பிரபு செல்வரங்கம், தெரியாதா உங்களுக்கு ?

கலை: தெரியாதே வந்த செய்தி என்னவோ ?

செல்வ: எங்களோட கிராமம் எலமன்பட்டியிலே மாரியம்மன் பண்டிகை போட்டிருக்காங்க. அதுக்கு ஒரு இசைத்தட்டு நடனம் ஏற்பாடு பண்ணணுமாம். எங்கவூர்க்காரனுங்க தாழம்பூ வேணும் தாழம்பூ வேணும்னு ஒத்தைக் கால்லே நிக்கறாங்க,

கமல: ஐவோ பாவம் கொக்குகள் மீனுக்காக நிற்பதைப் பார்த்திருப் பார்கள் !

387-5-3