பக்கம்:பதினாறும் பெறுக.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

10

இளங்: ஓ! மன்னிக்க வேண்டும் தாழம்பூ! உன் அம்மாவை நான் மறந்தேவிட்டேன்.

தாழம் : அந்தத் தவறொன்றை நானும் செய்துவிட்டேன் இளங்கோ.

இளங்: என்ன தவறு?

தாழம்: உங்களது பயங்கரக் காதலை அம்மாவுக்குத் தெரியாமல் நான் பெற்றுக் கொண்டேனே!

இளங் : பயங்கரக் காதலையா தாழம்பூ! நம்முடைய காதல் முல்லை மலர்போல் மென்மையானது. கொம்புத் தேன் போல் இனிமை யானதாயிற்றே! இதையேன் பயங்கரமாக்குகிறாய்?

தாழம்: இதை என்னை வந்து கேட்கிறீர்களே! இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியரையல்லவா கேட்கவேண்டும்.

(புத்தகத்தைக் கொடுக்கிறாள்) (பெற்றுக்கொண்டு பார்க்கிறான்)

இளங்: ஓ!"செக்ஸ்” புத்தகம் பயங்கரக் காதல். இதை அம்மா பார்த்து விட்டார்களா?

தாழம்: நான் மறைக்க முயன்றேன். முடியவில்லை. என் கண் கலங்கு மாறு கடிந்து பேசினார்கள். இதை நான் உங்களிடம் வாங்கியது தவறு தானே?

இளங்: கொடுத்தது என் தவறு, தாழம்பூ என்றாலும் நாம் காதலிப்பது தவறல்லவே?

தாழம்: ஏன் இந்தச் சந்தேகம்?

இளங்: கண்ணும் கருத்துமாக நாம் ஈட்டி வளர்க்கும் தூய்மையான காதலை மறைத்து, மறைத்து, இன்னும் எவ்வளவு காலம் சிறைப் படுத்திவைப்பது தாழம்பூ?

தாழம்: எத்தனை காலம் வைத்திருந்தாலும் கெட்டுப் போகாத பண்டமல்லவோ இது?

இளங்: பசித்தவன் முன்பு பால் சோறு, எடுத்துப் புசிக்காமல் எப்படிப் பொறுத்துக் கொண்டிருப்பது?

(அவள் கையைப் பற்றுகிறான்)

தாழம் : அம்மாவின் மகள் நான். ஆளனின் மனைவியாகும்வரை பொறுத்து இருக்கத்தான் வேண்டும்.

(எதிர்பாராது கூடையுடன் வருகிறான் பணியாள் முத்தன்)

முத்தன்: பொறுமை எதுக்கும் பொறுமை வேணும். பொறுத்தவர் பூமியாள்வாருன்னு சொல்லுவாங்க. ஆட்சி நடத்தறவங் களுக்கு மட்டுமா? அது காதல் நடத்துறவங்களுக்கும் அது தேவைங்க தம்பி, தேவை.

(இருவரும் திடுக்கிட்டு விலகுகின்றனர்)

தாழம் : இளங்கோ! நான் வருகிறேன். (போகிறாள்)

இளங்: முத்தா! எங்கே இந்தப் பக்கம்? எதற்குக் கூடையோடு கிளம்பி விட்டாய்

முத்தன்: இது வெறும் ஒதட்டுக் கேள்வி தம்பி. இந்த சமயத்திலே இங்கே ஏண்டா வந்தேன்னு கேளுங்க.அது உள்ளத்துக் கேள்வி.