பக்கம்:பதினாறும் பெறுக.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11

11

இளங்: முத்தா! எனக்கு உள்ளமும், உதடும் ஒன்றுதான். எளிதில்

உணர்ச்சி வயப்படும் கல்லூரி மாணவன் என்றாலும், உண்மைக்குப் புறம்பாக, ஒழுக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியுமல்லவா?

முத்தன்: ஓ! அது தெரியுந்தம்பி.

இளங் : அப்படியானால் நீ கண்ணால் பார்த்ததை நெஞ்சோடு வைத்துக்கொள் உதட்டால் உதிர்த்துவிடாதே!

முத்தன் ஆகட்டும் தம்பி, கொஞ்ச நாளைக்கா? எப்பொழுதுமா?

இளங்: கொஞ்ச நாள். காலம் கனியும் வரை.

முத்தன்: ஆகட்டுந்தம்பி. கூடைவேலை கெடக்குது. நான் வர்றேன்.

(போகிறான்)

இளங் (பெருமூச்சுவிட்டு) அப்பா! நான் தப்பினேன்!

(வேறு பக்கம் போகிறூன்)

காட்சி 5

இடம் : பரமசிவம் வீடு

காலம் : மாலை

(பரமசிவம் 'பயங்கரக் காதல்’ புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். பணியாள் முத்தன் கூடையோடு வந்து பார்க்கிறான்)

முத்தன்: என்னங்க எசமான் புத்தகம்? பரம எதுக்கடா கேக்கறே? நீ படிக்கப் போறியா?

முத்தன்; எனக்கேதுங்க படிப்பு அட்டையிலே என்னமோ நிருவாணப

படம் இருந்ததேன்று பார்த்தேன்.

பரம: இதை எல்லாம் நீ பார்த்தா மனசு கெட்டுப் போயிடும்பா. போய் ஒன்னோட வேலையைப் பாரு.

முத்தன்: ஆமாம்! நான் பார்க்கக்கூடாது. நெசந்தான் எசமான். நீங்க பாத்து உங்க மனசு கெட்டுப்போயி அதனாலே உங்களுக்கு ஏதாச்சும் ஆனா, செய்யறதுக்கு நான் இருக்கிறேன். எனக்கு ஏதாச்சும் ஆனா செய்யறது யாருங்க? நீங்க சொல்றது நெசந்தானுங்க!

பரம: முத்தா! வருத்தப்படறியாடா? நான் ஒனக்கு நிரம்ப கஷ்டம் கொடுக்கறேண்டா ஆமா, அதுகளுக்கு சாப்பாட்டுச் சாமா னெல்லாம் வாங்கிக் கொடுத்திட்டியா? அவளுக்குத் தலைவலி காய்ச்சல்னு சொன்னாளே, தேவலாமா?

முத்தன்: அவங்க நல்லாத்தான் இருக்காங்க எசமான். எல்லா சாமானும் வாங்கிக் கொடுத்திட்டேன். ஆமாம், எசமான்! இந்தப் பொத்தகத்தை நான் வேறே ஒருத்தர் கையிலே பார்த் தேனே! இது நீங்களா வாங்கினீங்களா? இல்லை. . . .

பரம: நம்ப தம்பியோட புத்தகமடா. சும்மா எடுத்துப் பார்த்தேன்.அதுதானே கேட்டேன். பாருங்க. பாருங்க. தம்பி யாட்டம் பக்கத்திலே ஒருத்தியை வச்சிக்கிட்டு வேணாலும் பாருங்க.