பக்கம்:பதினாறும் பெறுக.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

மன்னிப்புத் தருவாயோ என் மனைவி-கற்பின் மாணிக்கமே என்றன் பொன்னழகி என்ன நினைத்து நீ மடிந்தனையோ?-என்னை இறவாத பிணமாக்கி மறைந்தனையோ? (மயங்கி விழுகிறான். பின்னர் மெதுவாக எழுந்திருக்கிறான்)

பாட்டுவேறு-தாளம்-ஆதி

பெருமகள்: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்

அளவோடு பெற்று அறிவோடு வாழ்க!

தலைவன் தெளிவுக்கு எங்கள் வாழ்விது கண்டீர் . திட்டமில்லாமலே பெற்றிடவேண்டாம்

எல்லோரும் வாழ்க! தமிழ் மொழி வாழ்க! தமிழ் நிலம்

வாழிய! தமிழர்கள் வாழியவே!

வாழ்வு வளம்பெற குடும்பநலம் பெறும் வகையினை உணர்ந்து வாழியவே! வகையினை உணர்ந்து வாழியவே!

முற்றுகிறது.

(எல்லோரும் கைதட்டுகின்றனர். திரை விழுகிறது. செல்வரங்கம்

ஆத்திரப்படுகிறார்) கல்லூரித்

தலைவர்: (முன் வந்து பெரியோர்களே!) மாணவ மாணவி யரே "ஆடுவோமே பள்ளுப்பாடுவமே இனி அச்சமில்லை இன்பநிலை தேடுவோமே" என்று தொடங்கிய நாடகம், "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம், அளவோடு பெற்று அறிவோடு வாழ்க’ என்று முடிவு பெறுகிறது. நாம் ஆடிப்பாடி மகிழ்ந்து அச்சமற்ற இன்பநிலை பெற வேண்டுமானால், குடும்பநலத் திட்டம் காட்டுகின்ற வழிப்படி கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அளவுக்கு மிஞ்சாமலும் அமுதமான_வாழ்வை நஞ்சாக ஆக்காமலும், அளவோடு மக்களைப் பெற்று, அறிவோடு வாழ்ந்திட முடியும். இவ்வரிய கருத்துள்ள-பயனுள்ள நாடகத்தினை நடத்திய கமலவேணி குழுவினர்க்கு எங்கள் மனம் நிறைந்த நன்றியை. . . . . . . . . .

செல்வ: (எழுந்து) நிறுத்துமையா பேச்சை பிரமாதப்படுத்தாதீர்! இந்த நாடகத்திலே என்னய்யா கருத்து கொடிகட்டிப் பறக்குது?

தலைவர்: குடும்ப வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கனிகளின் கலைப்படையல் இந்த நாடகம். பிரத்தியட்ச வாழ்வின் படப்பிடிப்பு செல்வ குடும்பத்திலே அதிகம் பிள்ளை பெறக்கூடாதன்னு சொல்றவங்க மொதல்லே தமிழ் வருஷத்தை மறந்திடணும் வாத்தியாரே தெரியுமா சங்கதி?

க. தலைவர்: வருஷத்தை ஏன் மறக்க வேண்டும்?

செல்வ: பிரபவ முதல் அட்சய முடிய அறுபது வருஷங்களும், நாரத பகவான் பெத்த அறுபது பிள்ளைகளோட பெயராகும்.

முத்தன்: அதுக்கு பதிலாத்தான் இப்ப திருவள்ளுவர் ஆண்டு.

இது தேவையில்லையே எசமான்? 

செல்வ: முத்தா! நீ நிறுத்தடா பிரின்சுபாலைக் கேக்குறேன்.

- மண்ணுக்கு மரம்பாரமா மரத்துக்கு இலை பாரமா?

387-5-4