பக்கம்:பதினாறும் பெறுக.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26

26

காட்சி 10

இடம் : கமலவேணி வீடு. காலம் : முற்பகல்.

(இளங்கோ. கமலவேணி இருவரும் இருக்கின்றனர்)

கமல : இளங்கோ! நம்முடைய நாடகத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு அந்தப் பிரிவு என்னை அவமானப்படுத்தவே விரும்பினர்.

இளங் நல்ல மூக்கறுப்பு அவரது முயற்சியை கல்லூரித் தலைவர்

அழகாகத் தோற்கடித்துவிட்டார்.

கமல செல்வரங்கம் பொல்லாத குணம் படைத்த நல்ல பாம்பு அடிப்பட்டுச் சென்றது காத்திருந்து கடிக்கும் என்பார்கள். உன் அப்பாவும், அவர் வார்த்தைக்கு மீற மாட்டாரே?

இளங் : எங்கப்பா அவருக்கு அளவுக்கு மிஞ்சி மரியாதை காட்டுகிறர்.

அது ஏனென்று புரியவில்லை.

கமல : இதையெல்லாம் முன்னிட்டு நான் ஒரு முடிவு செய்திருக்கி - றேன். இளங்கோ! என்னிடம் வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும் தாழம்பூவை நீ மணக்க விரும்புவது எனக்குத்

தெரியும்.

இளங் : நிரம்ப மகிழ்ச்சி! நானே. . . . . . அன்த...... உங்களிடம் . . . .

கமல : தேவையில்லை. ஒரு பேராசிரியரின் மகளான தாழம்பூவை மனந்துகொள்ள, உன்னைப்போன்ற ஒரு பட்டப்படிப்பு மாணவனுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கு இருக்க முடியும்? ஆல்ை எனது விருப்பம். . . . . . .

இாங் : என்னவென்று சொல்லுங்க,

கமல : 'செய்தக்கவல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும்’ என்ற வள்ளுவா வழியில் செல்பவன் நான். செல்வரங்கமும், உன் அப்பாவும் எனது இலட்சிய விரோதிகள். நான் அழுவதைக்கண்டு அவர்கள் சிரிக்க விரும்புகிருர்கள்.

இளங் : நீங்கள் நினைப்பதுபோல், என் தந்தை அவ்வளவு கொடியவ

ரல்ல.

கமல : ஒரு கொடியவனின் கையிலிருக்கும் கூர்மையான வாள் : அதற்கு நான் தப்பியாகவேண்டும். ஆகவே இளங்கோ! உங்கள் திருமணத்திற்கு நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். (கையில் காபி டம்ளர்களோடு தாழம்பூ வருகிருள்; இளங் : நிறைவேற்றக் கூடியதுதானே ? கமல மிகச் சுலபம். தாமம்பூவை நீ மணந்துகொள்ள விரும்பினல் அவள் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிடாமல் நீ குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டும்." இளங் : அடேயப்பா! நான் என்னவோ என்று பயந்து போய்விட்டேன். இந்த நிபந்தனை எனக்கு நிானே விதித்துக்கொள்ள வேண்டியதாயிற்றே. கமல : இதை உனது வாக்குறுதியாக நான் லுைத்துக்கொள்ளலாமா?

இளங் : மெய்யாக, நிச்சயமாக உண்மையாக இது என் வாக்குதுதி !