பக்கம்:பதினாறும் பெறுக.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28

28

இளங் : என்னைப்பெற்ற தாயிடம் சொல்லவேண்டிய செய்தி. தாயற்ற பிள்ளையர்தலால் தந்தையிடம் சொல்லுகிறேன். அதற் குத்தான். . . . . . - பரம தாராளமா சொல்லுடா தம்பி ஒன்ைேட ஆசையை நான்

நிறைவேத்தறேன். இளங் : நமக்குக் கடன் கொடுத்திருக்கின்ற பெரியவர் செல்வரங்கம், எனக்குப் பணப்பேராசை காட்டி அவருடைய சண்பகத்தை என தலையில் கட்டப்பார்க்கிருர், அந்தப் பெண்ணே நான் விரும்பவில்லையப்பா ! பரம : சீதனம் லட்ச ரூபாயடா தம்பி. இளங் : இலட்சாதிபதியாக வாழ்வதைக் காட்டிலும், லட்சியவாதியாக வாழ்வதையே நான் விரும்புகிறேன். - பரம ஓ ! அவ்வளவுக்குத் துனிஞ்சிட்டியா? என்னப்பா ஒன்ளுேட

லட்சியம் ? இளங் : நான் காதலிக்கும் தாழம்பூவை மணந்துகொண்டு, கட்டுப்

பாடான குடும்ப வாழ்க்கை நடத்தவேண்டும், அப்பா. பரம : பலே, ஒருநாளுேக்கு இப்படிச் சொல்லுவேன்னு எனக்கு

அப்பவே தெரியும்.

இளங் : அப்படியானல், நீங்கள் அனுமதியளிப்பதில் தடையேதுமில்லையே? பரம ஒன்னு இருக்குதே! தம்பி ஒனக்குக் கல்யாணத்தை முடிச்சப் பறந்தான் நம்மோட குடும்பம் பெருகனும். அதுக்காக ஒன்னைக் கட்டிக்கிறவ பதினறு கொழந்தைகளைப் பெற ணுங்கிறது என்ைேட ஆசை ! இளங் : (வியந்து) என்ன ? பதினறு ? பரம பதினுறென்ன, இருபதுகூட பெத்துக்கொடுப்பா லட்சாதிபதி

சண்பகம். அந்தப் பிட்சாதிபதி தாழம்பூ அதுக்குச் சம்மதிப்பாளா ?

(மூத்தன் வந்து நிற்கிருன்) இணங் . அவள் சமமதித்தாலும். . . . நமக்கு. . . .

பரம ; அவளோட அம்மா சம்மதிக்க மாட்டாள் அதுக்குத்தான் சொல்லவர்றேன். காதலிக்கிறவளேயே நீ கல்யர்னம் பண்ணிக்க. நான் மறுக்கலே, ஆன, என்ைேட ஆசை இது. அவள் பதினறு பிள்ளைகளைப் பெத்துக் கொடுக் கணும். ஒன்னு கொறைஞ்சாலும் ஒனக்கு வேறே கல்யாணம் பண்ணுவேன். இந்த நிபந்தனைக்கு அந்தக் கமலவேணி ஒத்துக்கணும் !

இளங் : அப்பா ! இது பயங்கரமான நிபந்தனையப்பா !

பரம : காதலும் பயங்கரமானதுதானே ?

முத்தன் : அதெல்லாமில்லிங்க எசமான் வெளியே தெரியாமெ இருக்கிற வரைக்கும் பயங்கரம், நாலுபேருக்குத் தெரிஞ்சி போயிட்ட இன்பகரமாயிடும் !

பரம : முத்தா ! இது தம்பியோட கல்யாண விஷயம்.!

முத்தன் இதைத்தான் எசமான் நானும் சொல்றேன்.

பரம : என் மகன், என்னுேட நிபந்தனைக்கு ஒத்துக்கத்தான்ே வேனும்: