31
தாழம் : என் தோழி பரிமளத்திற்குத் திருமணம் நடக்கப் போகிறதாம். மணவிழ்ாவில் நமது 'பதினறும் பெறுக’ நாடகத்தை நடத்தவேண்டுமென்று விரும்புகிறளம்மா !
கமல : நீ என்னம்மா சொன்னுய் ?
தாழம் : அம்மாவைக் கேட்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன்.
கமல : அதுதான் சரி. இந்தச் சமயத்தில் நாடகம் வேண்டாம்
தாமும்பூ.
காழம் : எனம்மா ?
கமல : நான் எதிர்பார்த்தபடி உனது திருமண ஏற்பாடுகள் அமைய வில்லை. மூன்றும் பதினறும் முட்டி மோதிக்கொண்டு குறுக்கே நிற்கின்றன !
தாழம் : விளங்கவில்லையே ?
கமல : உனக்கும் இளங்கோவுக்கும் பரமசிவனுர் மணம் முடிக்கிருராம். ஆளுல் மூன்றல்ல, பதினறு பிள்ளைகள் பெறவேண்டு மென்பது நிபந்தனையாம்.
தாழம் : பலே அந்தப் பெரிய மனிதர்கள் நமது நாடகத்தைப் பார்த்த தன் விளைவா இது ? நிபந்தனை நம்மைப் பழி வாங்குவ தாகவல்லவா இருக்கிறது ?
கமல இதை எப்படி நம்மால் ஒப்புக்கொள்ள முடியும் தாழம்பூ ?
தாழம் : அம்மா ! இப்பொழுதென்ன அவசரம் ? எனக்குத் திருமணமே
வேண்டாம்.
இளங் : அப்படியானல் எனக்கும் திருமணம் வேண்டாம்.
கமல : (சிரித்து) முதலில் நமது இலட்சியம் மணக்கட்டும். பிறகு வேண்டாம் வேண்டாம் என்ருலும் திருமணம் தாணுக நடக்கும்.
இளங் நல்லது நான் வருகிறேனம்மா.
கமல போய்வா. இளங்கோ, கலங்க வேண்டாம், காலம் வரும், காத்
திருப்போம்.
(போகிருன் இளங்கோ)
காட்சி 13
இடம் : பரமசிவம் வீடு. காலம் : முற்பகல். (பரமசிவமும், செல்வரங்கமும் வீற்றிருக்கின்றனர்)
செல்வ : பரமசிவம் ! தன்னேட மகள் பதினறும் பெக்கறதுக்கு ஒப்பு
குட்டாளா கமலவேணி ? பரம : ஐயா அவ லட்சியவாதியாச்சே, எப்படிங்க ஒத்துக்குவா ?
செல்வ அது தானே கேட்டேன். அந்த ராங்கிக்காரி ஒப்புக்கமாட்டான்னு எனக்குத் தெரியும். பிறகு, நம்ப சண்பகம்-இளங்கோ கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம் ? பரம : கொஞ்சநாள் போகட்டுமே!
387/5–3