பக்கம்:பதினாறும் பெறுக.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

32

செல்வ : பரமசிவம் ! நம்ப சம்பந்தம் கலக்கப்போறது. ஊரு முழுக்கத் தெரிஞ்சு போச்சு கல்யாண விருந்து எப்போ எப்போன்னு கேக்கிறாங்க. என்னாலே சொல்லி முடியலே. சீக்கிரமா வச்சிடுவோம் முகூர்த்தத்தை எப்படி ?

பரம: ஐயா ! இளங்கோ ஒரு தெளிவில்லாமெ இருக்கிறான். அவனுக்குத் தக்கபடியா சொல்லி மனசை மாத்தணும்.

செல்வ: அதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன்.

பரம : வேணாமுங்க. நானே செய்யறேன். ஒரு வாரத்திலே முடிவு சொல்றேன்.

செல்வ : நான் நம்பிக்கையோடு போகலாமா ?

பரம : ஆமாங்க ! நம்பிக்கை தானே மனித வாழ்வுக்கு முக்கியம் ?

செல்வ: நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டா நான் மனிதனாகவே இருக்க மாட்டேன். அவ்வளவுதான், வர்றேன்.

(போகிறார், வேறு பக்கமிருந்து இளங்கோ வருகிறான்.அதைக் கேட்ட வண்ணம்)

இளங் : என்னப்பா செல்வரங்கம் மிருகமாகப் போகிறேன் என்று மிரட்டுகிறார் ? எதற்கு இந்த மிரட்டல் ?

பரம : ஒண்னுமில்லேடா தம்பி ! இந்த மாதக் கடைசிக்குள்ளே,வாங்கின கடன் பத்தாயிரமும் வேணுமாம்.

இளங்: அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அறுவடை முடிந்துவிடும். . தென்னந்தோப்பையும் குத்தகைக்குவிட்டு நான் தீர்க்கிறேன். அவரது கடனை !

பரம : அந்தத் தைரியம் எனக்கும் இருக்குதடா தம்பி.

இளங் : பிறகேனப்பா அஞ்சவேண்டும்? அவருக்கு நாம் கடன்பட்டவர்களாயிருக்கலாம், அடிமைப்பட்டவர்களல்லவே.

(அப்பொழுது முத்தா முத்தா என்று அழைத்துக்கொண்டு எட்டு வயது சிறுவரன் சுந்தரம் ஓடி வருகிறான்.)

சுந்தர : முத்தா முத்தா உம். . . இந்த வீட்டிலே முத்தனைக் காணோமே (சிறுவனைக்கண்டு அஞ்சி நிற்கிறார் பரமசிவம். அவரை பார்த்ததும் வியப்பும் களிப்பும் கொள்கிறான் சிறுவன்) .

சுந்தர : அப்பா ! . . . அப்பா ! . . நீங்களா ?... நம்ப வீடா இது ? நமக்கு

இவ்வளவு பெரிய வீடு இருக்குதாப்பா ?. . . அடேய்ப்பா எவ்வளவு நல்லாருக்குதே வீடு.

(பரமசிவமும், இளங்கோவனும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர். முத்தன் வருகிறான்)

சுந்தர: ஏம்ப்பா பேசமாட்டேங்கறீங்க ? முத்தா! நீயும் வந்திட்டியா? ஒன்னத் தேடிக்கிட்டுத்தான் வந்தேன். இங்கே இருக்கிற தாகச் சொன்னாங்க வந்து பார்த்தா அப்பாவே இருக்காரு, ஆமா, அப்பா! ஏன் எங்கிட்டே பேச மாட்டேங்குறாரு ?