பக்கம்:பதினாறும் பெறுக.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35

காட்சி: 14

இடம்: கமலவேணி வீடு

காலம்: பிற்பகல்

(கமலவேணி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறாள்)

கமல: (பாடுகிறாள்)

'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" -

(இளங்கோவும், சுந்தரமும் வருகின்றனர்)

கமல: வா. இளங்கோ தம்பி யாரு?

இளங்: என்னுடைய தம்பியைப் போன்றவன்.

கமல: போன்றவன் என்றால், உண்மையில் தம்பியல்ல என்று பொருளா?

இளங்: இனித்தான் எதையும் ஆராய வேண்டும். பெயர் சுந்தாம்! என் தந்தையை அப்பன் என்கிறான். அவர் இவனை அனாதை என்கிறார். எனக்கொன்றும் விளங்கவில்லை.

கமல: தம்பி! உனக்கு அம்மா இருக்கிறார்களல்லவா?

சுந்தரம் : இருக்கறாங்க. பேரு மாலதிங்க.

கமல: தாய் இருக்கும்போது குழந்தை எப்படி அனாதையாகும்

சுந்தரம்: தாய் மட்டுமல்லம்மா. தகப்பனும் இருக்காருங்க. எங்க வீட்டுக்கு வர்றபோது காசு பணம் கொடுக்கறாரு. கண்ணே மகனேன்னு பிரியமா பேசறாரு. அவுங்க வீட்டுக்கு நான் போனதும் அனாதைப் பயலே போடா வெளியேங்கறாரே!

கமல: இளங்கோ இதென்ன வேடிக்கை?

இளங்: இதிலே ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. என் தாய் இறந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன, இரண்டாம் தாரம் செய்து கொள்ளும் அறிவிலியல்ல நான் என்று எல்லோ ரிடமும் சொல்லுபவர். ஆனால் வாரத்தில் ஓரிரு நாட்கள் வீட்டில் இருக்கமாட்டார்.

கமல: எங்கே போவார்?

இளங்: கேட்டால் தோட்டத்துக்கு போவதாகச் சொல்லுவார்.

சுந்தர: வாரத்திலே இரண்டொரு நாள்தான் அப்பா எங்க வீட்டிலே வந்து தங்குவாரு.

கமல: என்ன இளங்கோ?

இளங்: முத்தன் வாரத்திலே ஒரு முறை கூடையைக்கொண்டு போய் வீட்டுச் சாமான்கள் யாருக்கோ வாங்கிக் கொடுத்து விட்டு வருவான்.

சுந்தர : அது எங்க வீட்டுக்குத்தான் அம்மாகிட்டே கொண்டாந்து கொடுப்பான், சாப்பாட்டுச் சாமான்.

கமல: என்ன இளங்கோ?

இளங்: சென்ற கிழமை முத்தன் அப்பாவிடம் பேசும்பொழுது அவரது தவறு பற்றி இடித்துப் பேசினான். "மாலதியைக் கேட்டால் தெரியும். அந்தத் தவறு என்றான்,கடுமையாக வைதார் அப்பா,

337}5-6