பக்கம்:பதினாறும் பெறுக.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

36

சுந்தர: மாலதிதான் எங்களோட அம்மா.

கமல : என்ன இளங்கோ! புரிகிறதா உனக்கு? இது பயங்கரக் காதலல்ல. உன் தந்தையாரின் இரகசியக் காதல். பரிதாபத்திற்குரிய ஒரு பேசும் கதை.

சுந்தர : அம்மா! அப்பா ரகசியமா எங்க வீட்டுக்கு வந்து, அம்மாகிட்டே பேசிகிட்டு இருப்பாரு ரகசியமாப் போயிடுவாரு.

கமல : ஆமாம், முத்தன் இருப்பது எங்கே?

சுந்தர: எங்களுக்குக் காவலா எங்க வீட்டிலேயேதான் இருக்கிறது. படுத் துக்கிறது. என்னைக் காப்பாத்துற முத்தனும், அப்பாவுமே என்னை அனாதைப் பயல்னு சொல்லிட்டா, அப்புறம் நானும் என்னோட தங்கையும் எப்படியம்மா பொழைக்கிறது, எப்படியம்மா படிக்கிறது? இது எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா அவுங்க மனசு எப்படியம்மா இருக்கும்?

கமல: சுந்தரம் உங்க வீடு எங்கேயப்பா இருக்கிறது?

சுந்தர: ஊருக் கோடியிலே கொண்டலாம்பட்டியிலே இருக்குதுங்க.

(தாழம்பூ வருகிறாள்)

தாழம்: யாரும்மா இந்தப் பையன்?

கமல: இளங்கோவின் தம்பி.

தாழம்: இளங்கோவுக்குத் தம்பி ஒருவன் உண்டா?

இளங் : அம்மா இப்படியாக உறுதி செய்கிறார்கள்.

கமல: இது ஏற்கெனவே உறுதியாகிவிட்ட விஷயம். இப்பொழுது நீ செய்ய வேண்டியதெல்லாம் இளங்கோ இந்தப் பையனுக்கும், இவனைப் பெற்ற உன் அப்பாவிச் சிற்றன்னை மாலதிக்கும், உரிமையும் நீதியும் வழங்க வேண்டும். இது உன்னுடைய கடமை.

சுந்தர: எங்கம்மா காய்ச்சல் வந்து கண்ணை மூடிக்கிட்டு கெடக்கறாங்க,அண்ணா!

இளங் : அம்மா! நான் ஒன்று நினைக்கிறேன்.

கமல: என்ன இளங்கோ?

இளங்: தம்பி சுந்தரத்தோட நாம் எல்லோரும் அவர்கள் வீட்டுக்குப் போவோம். மாலதியைக் கண்டு எல்லாவற்றையும் விசாரித்தறிவோம். பின்னர் உறுதியாக அவர்களுக்கு நீதி வழங் வோம். நான் பொறுப்பேற்கிறேன்.

கமல: நிரம்ப நல்லது. செய்யத்தக்கது. அதுதான்.

தாழம்: நானும் உங்களோடு வர வேண்டுமா?

இளங்: நாம் எல்லோரும் என்று சொன்னேனே! நீ நம்மைச் சார்ந்தவள் இல்லையா? இதிலே நம்முடைய விவகாரமும் இருக்கிறது. தாழம்பூ புறப்படு.

தாழம்; இதோ, நான் தயார்.

இளங்: வாருங்கள்! வாருங்கள்!

(எல்லோரும் போகின்றனர்)